குலதெய்வம்.

கடவுள் ஒன்று. இறை நான்கு. தெய்வங்கள் பல. தமிழ்முன்னோர் நிறுவியுள்ள முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில்- இடம் என்பது விசும்பு என்கிற திரம், அது கடவுள் என்றும் பேசப்படுகிறது. காலம் என்பது அடிப்படையில் தனிஒன்றுகள், வழிநிலையில் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள் அது இறை என்றும் பேசப்படுகிறது. ஆற்றல் மூலமான இந்த, கடவுளும், இறையுமே இயற்கையின் அனைத்து உருவாக்கங்களிலும் தொய்ந்திருக்கிற காரணம் பற்றி, நம்மால் உருவாக்கப் பட்டது எல்லாம் கடவுள் கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது எல்லாம் இறை கூறு என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். கடவுள் கூறையும், இறைக் கூறையும் தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு. கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. அவற்றின் கூறுகளாக அமைந்த தெய்வங்கள் பற்பல. ஐந்திரம் என்ற பொருள்பொதிந்த சொல்லில் தமிழர் நிறுவிய ஐந்து திரங்கள் இந்தக் கடவுளும் இறையும். தெய்வங்கள் மூன்று வகைப்படும். 1. கடவுள்கூறு தெய்வம் 2. இறைக்கூறு தெய்வம் 3. குலதெய்வம் கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளை உடைய ஒற்றைத் திரம் ஆகும். இறை- நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள...